< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!
|10 Aug 2023 10:24 AM IST
சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னையில் 13 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் ஏற்றுமதி நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கியில் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அமைந்தகரை உள்பட 13 இடங்களில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
கடன் வாங்கிய பணத்தை மத்திய அரசு அனுமதியின்றி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.