கரூரில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை..!
|கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு மற்றும் கடை ஆகிய 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நேற்று மாலை சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நிறைவடைந்தது.
சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான "தனலட்சுமி செராமிக்ஸ்" என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கரூரில் 4 இடங்களில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தனலட்சுமி செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடையில் நடைபெற்று வந்த சோதனை காலை 9 மணியளவில் நிறைவடைந்தது. மற்ற மூன்று இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூரில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு ஆவணங்களை திரட்ட மீண்டும், மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.