< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
லைகா நிறுவனத்திடம் மோசடி; கல்லால் குழும முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்
|27 May 2023 7:39 PM IST
லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது.
சென்னை,
லைகா நிறுவனத்திடம் 114 கோடியே 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையில் லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.