< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 July 2022 3:36 PM GMT

ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தொண்டி,

திருவாடானை ஊராட்சித் தலைவர் இலக்கியாராமு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாடானை ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி திருவாடானை ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே திருவாடானை ஊராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு, வடக்கு தெரு, மேல தெரு, தெற்கு தெரு, கிழக்கு தெரு மற்றும் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் ஒரு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, காவல்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். மேலும் திருவாடானை பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைகளில் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத கடை உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் பல வருடங்களாக நிலுவையில் உள்ள ஊராட்சி வரி பாக்கியை முழுமையாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் வரிப்பாக்கி செலுத்த வேண்டிய கடைகள் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன் அந்த கடைகள் அனைத்தும் உடனடியாக மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி உடனடியாக ஏலம் விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்