திருப்பூர்
மடத்துக்குளம் பகுதியில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.15½ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.
|மடத்துக்குளம் பகுதியில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.15½ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.15½ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.
சந்தான கோபால கிருஷ்ணசுவாமி
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத துறை, திருப்பூர் மண்டல இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் உதவி ஆணையர் ஜெயதேவி (கூடுதல் பொறுப்பு) தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் மகேஸ்வரன் (ஆலய நிலங்கள்), சரக ஆய்வர் சரவணக்குமார், கோவில் தக்கார் அம்சவேணி, நில அளவையர் நிஷாந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கடத்தூர் சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.53 ஏக்கர் நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும்.
அறிவிப்பு பலகைகள்
அதுபோல மைவாடி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 14.39 ஏக்கர் புஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும் கொழுமம் தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான உடுமலை தாலுகா கல்லாபுரம் கிராமத்தில் உள்ள 2.48 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இவ்வாறு மடத்துக்குளம் பகுதியில் மொத்தம் ரூ.8 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்த இடங்களில் கோவில் நிர்வாகங்களின் சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.
வெங்கடேசப்பெருமாள் கோவில்
அதுபோல் அனிக்கடவு கிராமம் சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
--------