< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:தும்மக்குண்டு கிராம மக்கள் மனு
தேனி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:தும்மக்குண்டு கிராம மக்கள் மனு

தினத்தந்தி
|
16 May 2023 12:15 AM IST

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தும்மக்குண்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக, கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊராட்சியில் ஆதிதிராவிட மக்களுக்காக அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற அரசுத்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். தேவாரத்தை சேர்ந்த சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த மனுவில், 'லட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சமுதாயக்கூடம் அருகில் சாக்கடை கால்வாயுடன் சிமெண்டு சாலை அமைக்க ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சாக்கடை கால்வாய் அமைக்காமல் சிமெண்டு சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்