< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
15 Sept 2023 4:15 AM IST

பழனி நகரில் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பழனி நகர செயலாளர் கந்தசாமி தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், பழனியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. குறிப்பாக நகரின் ஆர்.எப்.ரோடு, கான்வென்ட் ரோடு, தபால் அலுவலக இணைப்பு ரோடு, உழவர்சந்தை ரோடு ஆகிய சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்