< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தினத்தந்தி
|
28 Nov 2022 5:03 PM IST

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அதனால் திருவண்ணாமலை நகர மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள போளூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது சாலையோரம் உள்ள கடைகளில் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள், விளம்பர பலகைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்