< Back
மாநில செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி:    விருத்தாலத்தில் மருத்துவமனை கட்டிடம் இடிப்பு    போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: விருத்தாலத்தில் மருத்துவமனை கட்டிடம் இடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் விருத்தாலத்தில் மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்பட்டது.


விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் 4½ ஏக்கர் பரப்பளவிலான முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் மற்றும் வீடுகளை கோர்ட்டு உத்தரவு படி இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதில், நேற்று விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் ஆலடி ரோடு பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணியை வருவாய்த் துறையினர் தொடங்கினர். அப்போது விருத்தாசலம் பஸ் நிலையம் சுற்றுச்சுவரையொட்டி உள்ள பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணி நடந்தது.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்