< Back
மாநில செய்திகள்
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
வேலூர்
மாநில செய்திகள்

பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தினத்தந்தி
|
23 Nov 2022 12:00 AM IST

பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

புதிய மேம்பாலம்

கடந்த வருடம் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பொன்னை ஆற்றுப்பாலம் பலத்த சேதம் அடைந்தது. இதனால் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சேதம் அடைந்த பாலத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. இதனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நீர் வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தலின் பேரில் பொன்னையாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு கடந்த மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சுமார் ரூ.30 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள மரங்கள், ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுகந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் நளினி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்