< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் தொடரும் என்கவுண்டர் - மனித உரிமை ஆணையம் அதிரடி
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் என்கவுண்டர் - மனித உரிமை ஆணையம் அதிரடி

தினத்தந்தி
|
15 March 2023 5:58 PM IST

கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது, காவல்துறையினர் சுட்டுப்பிடித்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் உத்தவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.

இந்த நிலையில், கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பி ஓடியபோது, காவல்துறையினர் சுட்டுப்பிடித்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.




மேலும் செய்திகள்