< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணை
|6 May 2023 12:01 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ேநற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் 16 நிறுவனங்களில் இருந்து கணக்கர், புள்ளி விவரம் பதிவேற்றம், பயிற்சி மற்றும் வேலை, செக்கிங் பேக்கிங், சேவை மற்றும் விற்பனை, தர கட்டுப்பாட்டாளர், தையல், செக்கர், பேக்கர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்தனர். முகாமில் தேர்வான 79 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 35 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பில் திறன்பேசியினை கலெக்டர் வழங்கினார். இதில், 146 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.