< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்:மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்:மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

தினத்தந்தி
|
17 Aug 2023 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். முகாமில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 263 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதி அடிப்படையில் நேர்க்காணல் நடத்தி, 52 பேரை தேர்வு செய்தனர். அதன்பிறகு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு அலுவலர் முரளிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ராஜா, மாற்றுத்திறனாளி சங்க உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்