< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சக வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற ஊழியர்கள்- தேனியில் அதிர்ச்சி சம்பவம்
|24 Oct 2022 7:55 AM IST
தேனி மாவட்டத்தில், வாக்குவாதத்தின்போது வட மாநில தொழிலாளியை, சக ஊழியர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் சின்னமனூரில், வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்ததால், வட மாநில தொழிலாளியை, சக ஊழியர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.