< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி பணியாளர் பலி
|5 Jun 2022 11:27 PM IST
எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பணியாளர் பலியானார்.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நெடுங்குளம் கோம்பைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தி (வயது 50). இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் காந்தி அதே பகுதியைச் சார்ந்த சிவகாமி என்பவரது தோட்டத்தில் உள்ள மின் சாதன பெட்டியில் சரிவர மின்சாரம் வராததால் சரி செய்ய மின்சார கம்பத்தில் ஏறி வேலை செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காந்தியின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.