< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்
|26 Sept 2023 3:00 AM IST
பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 56). இவர் கூடலூர் அருகே தேவர்சோலை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் பிதிர்காடு வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு தேவாலயத்தை ஒட்டியுள்ள மின்மாற்றியின் மீது ஏறி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு விஜயகுமார் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள், அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.