சேலம்
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
|தலைவாசல் அருகே மின்கம்பத்தில் பழுதுநீக்கிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே மின்கம்பத்தில் பழுதுநீக்கிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
மின்வாரிய ஊழியர்
தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). ஒயர்மேன். இவர், சிறுவாச்சூரை அடுத்த ராஜீவ்நகரில் நேற்று மதியம் 2 மணிக்கு மின்கம்பத்தில் ஏறி பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த கண்ணன் மனைவி மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
உறவினர்கள் கதறல்
தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் பலியான சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், தலைவாசல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கண்ணனின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
பலியான கண்ணனுக்கு மணி என்ற மனைவியும், சதீஷ் (30), சுபாஷ் (29) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சுபாஷ் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று 3 நாட்கள்தான் ஆகிறது.