பெரம்பலூர்
ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
|ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அத்தியூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் லெனின் தலைமை தாங்கினார். இதில் மருதையாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். திட்ட தொழில்நுட்ப விளக்கங்களை உதவி பொறியாளர் தினகரன் கூறினார். நீரினை பயன்படுத்துவோர் திட்ட விவரங்கள் குறித்து அணி திரட்டல் மற்றும் பயிற்சி நிபுணர் ஜெயக்குமார் கூறினார். கூட்டத்தில் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். நீர்வளங்கள் மாசுபடுதலை தடுத்தல் வேண்டும். ஏரி, குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் அம்பிகாபதி வரவேற்றார். முடிவில் சங்க தலைவர் லெனின் நன்றி கூறினார்.