புதுக்கோட்டை
வேங்கைவயலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
|வேங்கைவயலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை என்ற பெயரில், அவர்களை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேங்கை வயலில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். பொதுவான தொட்டியில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.