< Back
மாநில செய்திகள்
அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்
கரூர்
மாநில செய்திகள்

அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:54 AM IST

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்புக்குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் எம்.பி.யும், குழு தலைவருமான ஜோதிமணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மத்திய அரசினால் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து திட்ட பணிகளையும்...

ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை விவரம் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் கட்டுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் காலங்களில் அனைத்து பணிகளையும் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த பணியில் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் வேளாண்மைதுறை, பள்ளிக்கல்வித்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகம், பேரூராட்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக, நல்லமுறையில் தரமாக செயல்படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்