< Back
மாநில செய்திகள்
வத்திராயிருப்பில் டிரான்ஸ்பார்மர் திடீர் பழுது
விருதுநகர்
மாநில செய்திகள்

வத்திராயிருப்பில் டிரான்ஸ்பார்மர் திடீர் பழுது

தினத்தந்தி
|
21 March 2023 12:53 AM IST

வத்திராயிருப்பில் டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதானதால் குறைந்த மின்அழுத்தத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வத்திராயிருப்பு,


வத்திராயிருப்பில் டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதானதால் குறைந்த மின்அழுத்தத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மின்தடை

வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் சாலையில் வத்திராயிருப்பு துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின்நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் 110 ஹெவி கொண்ட டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதானது. இதனால் வத்திராயிருப்பு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு கிருஷ்ணன்கோவில், வலையபட்டி துணை மின் நிலையத்திலிருந்து வத்திராயிருப்பு துணை மின் நிலையத்திற்கு மின்வினியோகம் கொடுக்கப்பட்டு அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அவதி

இவ்வாறு கொடுக்கப்பட்ட மின்சாரம் குறைந்த அழுத்தத்துடன் வந்ததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை முதல் பழுதான டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்த பணியானது மாலை 5 மணி வரைக்கும் தொடர்ந்ததால் போதுமான அளவு மின்சாரம் இன்றி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போதுமான மின்சாரம் இல்லாமல் 20 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். வீட்டு உபயோக பொருட்கள், மின்மோட்டார்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் ஒரு சில ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பிறகு தான் பணி முடிந்து முழுமையான மின்வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்