கரூர்
இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
|கரூரில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர், பல்ேவறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு நாள்
கரூரில் நேற்று தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமையில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் சுப்பிரமணியன், கோல்டுஸ்பாட் ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் ஆலம் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஆண்டாள் தினேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாலை அணிவித்து மரியாதை
இதேபோல் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையிலும், வீரதேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் முருகேசன் தலைமையிலும் இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.