கள்ளக்குறிச்சி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் விடுபடக்கூடாது
|மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபடக்கூடாது என அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருக்கோவிலூர் பகுதியில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விண்ணப்பத்தில் பொதுமக்கள் அளித்துள்ள விவரங்கள் அனைத்து சரியானது தானா என அவர்கள் சரிபார்த்தனர்.
ஆய்வு
இந்த பணியை திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபடாதவகையில் பணியை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகுராமன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.