கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை அருகேகிராமங்களில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை
|தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால்விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு ஒற்ைறபாளையம், பிக்கனப்பள்ளி, ஆலள்ளி, கிரியனப்பள்ளி, மணியம்பாடி ஆகிய கிராமங்களில் சுற்றித்திரிந்தன.
பின்னர் யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் மாந்தோப்பிற்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் மாந்தோப்பில் மரக்கிளைகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இழப்பீடு
இதற்கிடையே நேற்று காலை வரை விவசாய நிலங்களில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து யானைகளை விரட்ட விவசாயிகள் முயன்றபோது ஆக்ரோஷமடைந்த யானைகள் விவசாயிகளை துரத்தின. இதனால் விவசாயிகள் ஓட்டம் பிடித்து கிராமத்துக்குள் சென்றுவிட்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள சாலையில் உலா வந்த யானைகள் நீண்ட நேரத்திற்கு பின் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறி மரக்கட்டா வனப்பகுதி நோக்கி சென்றன. யானைகளால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.