கோயம்புத்தூர்
யானைகள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
|வால்பாறை அரசு பள்ளியில் யானைகள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறையில் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யானைகள் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சி, வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
மேலும் மனிதன் யானையோடு இணைந்து வாழ்தல் உள்பட பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சிவசுப்பிரமணியன், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சங்கர் ராமன், திவ்யா, கணேஷ் ரகுராம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.