< Back
மாநில செய்திகள்
சூளகிரி அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சூளகிரி அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
13 May 2023 12:30 AM IST

சூளகிரி:

சூளகிரி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை சுற்றித்திரிகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் உலா வரும் இந்த யானை இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவு சூளகிரி அருகே சுண்டட்டி கிராமத்தில் பாபு (வயது 30) என்பவரின் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

கோரிக்கை

மேலும் அந்த பகுதியில் சில விவசாயிகளின் நிலத்திலும் நுழைந்து நெற் பயிர்களை சேதப்படுத்தியது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்