< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில்  சாலையை கடந்த யானைகள் கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் சாலையை கடந்த யானைகள் கூட்டம்

தினத்தந்தி
|
6 Sept 2022 10:46 PM IST

தேன்கனிக்கோட்டையில் சாலையை கடந்த யானைகள் கூட்டம்

தேன்கனிக்கோட்டை, செப்.7-

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஅள்ளி வனப்பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது. இதையடுத்து 6 யானைகளையும் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று ஆலஅள்ளி வனப்பகுதியில் இருந்து 6 யானைகளையும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது 4 யானைகள் மற்றும் 2 யானைகள் என தனித்தனியாக பிரிந்து தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா கிராமத்திற்கு அருகே யானைகள் சாலையை கடந்தன. அதனால் அந்த வழியாக ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போன் பள்ளம் வனப்பகுதிக்கு தற்போது யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்