கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
|தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நொகனூர் வனப்பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரம் கிராம பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு விவசாயிகள் ரமேஷ் (வயது 49), கோபால் (70), அப்பாசாமி ராவ் (70), ஈரப்பா (50) ஆகியோரது விளை நிலங்களில் 3 ஏக்கருக்கும் அதிகமான தக்காளி, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
இதனிடையே நேற்று காலையில் விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் யானைகள் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.