< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே   சாலையில் சுற்றித்திரிந்த யானை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த யானை

தினத்தந்தி
|
22 July 2022 12:08 AM IST

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த யானை

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே நேற்று முன்தினம் இரவு நொகனூர் வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாவரகரை கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்குள் பலா மரத்தில் பலா பழங்களை பறித்து ருசித்துள்ளன. இதை அறிந்த விவசாயிகள் பட்டாசு வெடித்து மீண்டும் நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று காலை அஞ்செட்டி சாலையில் மரகட்டா என்ற இடத்தில் யானை சாலையில் நின்றது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் நிறுத்தினர். பின்னர் யானை தானாக காட்டிற்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்