< Back
மாநில செய்திகள்
அஞ்செட்டி வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அஞ்செட்டி வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

தினத்தந்தி
|
4 Oct 2023 1:00 AM IST

அஞ்செட்டி வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பஞ்சல்துணை பீட் மொட்டிகான் பாறை வனப்பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் யானை அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் அஞ்செட்டி வனச்சரகர் முரளி தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தனர். பின்னர் கால்நடை டாக்டர் பிரகாஷ் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கால்கள் செயலிழந்து கீழே விழுந்த யானை எழுந்து நிற்க முடியாததால் இதய துடிப்பு நின்று உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடல் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்