< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகேதோட்டத்தில் தக்காளி செடிகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகேதோட்டத்தில் தக்காளி செடிகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தினத்தந்தி
|
4 Sept 2023 1:00 AM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் தக்காளி செடிகளை சேதப்படுத்தின.

காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அரசகுப்பம் அருகே உள்ள லிங்கதீரனப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் புகுந்தன.

பின்னர் அந்த யானைகள் சந்திரப்பா, ரவி, பசுபதி, ராஜண்ணா, சரத் ஆகியோர்களுக்கு சொந்தமான தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து ஆயிரம் கிரேடு தக்காளிகளை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.

பயிர்கள் சேதம்

மேலும் விவசாயி சந்திரப்பாவின் பண்ணை வீட்டின் முன் இருந்த சீட்டை உடைத்து வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த 85 கிரேடு தக்காளியை கீழே கொட்டிவிட்டன. இதையடுத்து ரவி என்பவருக்கு சொந்தமான கொய்யா மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டன.

இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமையில் சென்ற விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்