< Back
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகேவிவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பென்னாகரம் அருகேவிவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

தினத்தந்தி
|
2 Sept 2023 1:00 AM IST

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை ஆட்டுக்குட்டிகளை தூக்கி வீசி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

யானை அட்டகாசம்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி, ஒகேனக்கல் வனப்பகுதியையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இந்த நிலையில் தாசிகிணறு கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. இந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டிக்கு சென்ற யானை 3 ஆட்டுக்குட்டிகளை தூக்கி வீசி கொன்றது. ஒரு குட்டி காயம் அடைந்தது. யானை தாக்கியதில் ஆட்டுக்குட்டிகள் இறந்ததை கண்டு பவுனேசன் அதிர்ச்சி அடைந்தார்.

கோரிக்கை

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானை தாக்கி இறந்த ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது இப்பகுதிக்குள் யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்கள் மற்றும் இறந்த ஆட்டுக்குட்டிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பவுனேசன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். காட்டு யானை தாக்கியதில் ஆட்டுக்குட்டிகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்