தர்மபுரி
பாலக்கோடு அருகேகிராமத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக்காட்டில் இ்ருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று அதிகாலை மணியாக்காரண்கொட்டாய், வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் நுழைந்த 2 பெண் காட்டு யானைகள் உணவு தேடி அலைந்தது. மேலும் காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிசஙசென்று பார்த்த போது இரண்டு காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளது. இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் 2 காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் கிராமத்திற்குள் வந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.