< Back
மாநில செய்திகள்
அக்னிசட்டி எடுத்து செல்லும் பக்தர்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

அக்னிசட்டி எடுத்து செல்லும் பக்தர்கள்

தினத்தந்தி
|
27 April 2023 6:45 PM GMT

காளியம்மன் கோவிலில் அக்னிசட்டி எடுத்து செல்லும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் திருப்பத்தூர் சாலை உப்புச் செட்டியார் தெருவில் காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 18-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். 25-ந் தேதி பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 26-ந் தேதி கிடா வெட்டுதலுடன், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10-ம் திருவிழாவான நேற்று மாலை காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் முளைபாரி எடுத்து கோவிலில் இருந்து திண்டுக்கல் சாலை வழியாக செட்டியார்குளம் சென்று செட்டியார் குளத்தில் முளைபாரி மற்றும் அக்னிசட்டி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்