< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு
நீலகிரி
மாநில செய்திகள்

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

தினத்தந்தி
|
22 Sept 2023 12:30 AM IST

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

ஊட்டி

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-Nam) குறித்த கருத்தரங்கு நடந்தது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தொடங்கி வைத்தார். நீலகிரி விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி, மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்து வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும், e-Nam செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு மாதிரி விற்பனை நிறுவனங்களான புளூ மவுண்டன் மற்றும் முதுமலை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளின் பெயரில் விற்பனை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் வேளாண் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்தும், விற்பனை குறித்தும் விளக்கம் அளித்தார். இதில், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்