திருநெல்வேலி
மின்னொளி கபடி போட்டி
|பரப்பாடியில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
இட்டமொழி:
பரப்பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண், பெண்களுக்கு 26-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், இலங்குளம் பஞ்சாயத்து தலைவருமான வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் வரவேற்றார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன், வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் எட்வின் ஜோஸ், நாம் தமிழர் கட்சி மெகுலன்ராசா, குருவானவர்கள் துரைசிங், கிறிஸ்டோபர் தவசிங், எழுத்தாளர் மதுரா, ஊராட்சி துணைத்தலைவர் ஏ.விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.