< Back
மாநில செய்திகள்
மின்தொடர்பான புகார்களை செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மின்தொடர்பான புகார்களை செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
28 Jun 2023 11:12 PM IST

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் மின்தொடர்பான புகார்களை செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் கோட்டங்களில் மின்தடை, மின்விபத்துகள், அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், மின்மீட்டர், தொய்வான மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற மின்சார புகார்கள் இருந்தால் 94987 94987 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். அதன்பேரில் உடனடியாக அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

இந்த தகவலை வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்