< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று போராட்டம்: பணிகள் முடங்கும் அபாயம்
|9 July 2024 8:48 AM IST
மின் ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்தால், மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 55,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில், மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மின் ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்தால், மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.