< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|9 July 2022 10:16 PM IST
தூத்துக்குடியில் மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திட்ட தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பி.எம்.எஸ். பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுப்பிரமணியன், பொறுப்பாளர்கள் முருகன், சுபாஷ் பண்டாரம், தங்கப்பழம் உள்பட ஏராளனமான மின்தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.