< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|8 Jan 2023 1:08 AM IST
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் புதிதாக 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உத்தரவு வழங்கியதை கண்டித்து கோஷமிடப்பட்டது. மேலும் வருகிற 10-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.