< Back
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
5 Jan 2023 12:52 AM IST

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மராட்டியத்தில் அதானி நிறுவனத்திற்கு மின்சாரம் வினியோகிக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மராட்டிய மின் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மிளகுப்பாறையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று காலை 8.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநிலத்தலைவர் கண்ணன், என்ஜினீயர் சங்க நிர்வாகிகள் நரசிம்மன், பொறியாளர் கழக நிர்வாகி சந்தான கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி அண்ணாதுரை, எம்ப்ளாயிஸ் பெடரேஷன் நிர்வாகி சிவசெல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்