கடலூர்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|கடலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்:
மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் (சி.ஐ.டி.யு.) கடலூர் செம்மண்டலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜீவா, மாவட்ட துணை தலைவர்கள் கலியமூர்த்தி, முருகையன், முத்தழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் கலந்து கொண்டு பேசினார். இதில் இணை செயலாளர்கள் தனசேகரன், ஞானசேகரன், சிவக்குமார், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சென்னிலவன் உள்பட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.