< Back
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் செயற்பொறியாளர் அலுவலகம் முன் மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் இன்னாசிமுத்து முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கருப்பையா, சங்க துணைத்தலைவர் சுடலைமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்