விழுப்புரம்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மின்வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி மக்கள் சேவைகள் தொடர்ந்திட வேண்டும், அரசு அறிவித்த பஞ்சப்படியை மின்வாரிய ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும், மின் ஊழியர்கள் ஏற்கனவே பெற்று வந்த 23 சலுகைகளை ஒரே உத்தரவில் பறித்ததை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
இதில் திட்ட செயலாளர் சேகர், பொருளாளர் ஏழுமலை, கோட்ட செயலாளர் அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.