< Back
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
9 Aug 2022 2:05 AM IST

மின்சட்ட திருத்த மசோதாவை கண்டித்து பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை மகாராஜநகர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மின்வாரிய தொழிலாளர் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2022-ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட தொழிலாளர் விரோத அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பொறியாளர் சங்க நிர்வாகி முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தொ.மு.ச. கார்த்திக், சி.ஐ.டி.யு. பீர் முகமது ஷா, சந்தானம், அம்பேத்கர் தொழிலாளர் சங்கம் அர்ஜூனன் மற்றும் முத்துக்குமார், பெருமாள்சாமி, இசக்கியப்பன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

மேலும் செய்திகள்