திருநெல்வேலி
மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் பாளையங்கோட்டை மகாராஜநகர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் பழனி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சரவணகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சட்ட ஆலோசகர் முரளி கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு 16-5-2023 அன்று நடைபெற்ற ஊதிய உயர்வு முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். வேலைப்பளு நிர்ணயம் தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்த நடத்தி விரைவாக முத்தரப்பு ஒப்பந்தம் போட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனிகுமார், மாநில செயலாளர் கணேசன், துணை பொதுச்செயலாளர் ராஜமுருகன், மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டியன், திட்ட செயலாளர் சங்கரசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.