< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மின் ஊழியர்கள் தர்ணா
|21 Oct 2023 12:15 AM IST
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பார்வதிபுரம்,
தமிழக மின்சார வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக போடப்பட்ட இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் சி.ஐ.டி.யு. மத்திய அமைப்பின் சார்பில் பார்வதிபுரம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பிரபகுமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சுவாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், துணைத் தலைவர் ஜான் சவுந்தரராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.