தூத்துக்குடி
மின்வாரிய ஊழியர் பலி
|சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் பலி
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டுபிரான்சேரி வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் பெருமாள் (வயது 52). இவர் நெல்லை மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று கயத்தாறில் இருந்து மேட்டுபிரான்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி நாற்கரசாலையில் திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழுந்து சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அன்டணி திலீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பெருமாளுக்கு ஜாக்குலின் என்ற மனைவியும், பிரவின் குமார் (25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.