மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - சரத்குமார்
|மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுவரை உயர்த்தாத வகையில் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு ரூ.54 முதல் ரூ.1130 வரை மின் கட்டணம் அதிகரித்திருப்பது எளிய மக்களின் மீது பெரும் சுமையை ஏற்றுவதாக அமையும்.
மத்திய அரசின் அதிகபட்ச வரி விதிப்பு ஒருபுறம் இருக்க, தமிழக அரசு, அதன் கடன் சுமையால் வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றாமல், மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தவும், மின் கட்டண உயர்வு அறிவிப்பின் பாதகத்தை உணர்ந்து, மறுபரீசிலனை செய்து உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.