< Back
மாநில செய்திகள்
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் - மின்சார வாரியம் அறிவிப்பு
மாநில செய்திகள்

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் - மின்சார வாரியம் அறிவிப்பு

தினத்தந்தி
|
5 Sept 2022 9:48 PM IST

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

பூந்தமல்லி: மாங்காடு, குன்றத்தூர் சாலை, எம்.ஜி.ஆர்.நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர்.

மேலூர்: மீஞ்சுர் நகர், சிறுவாக்கம், பி.டி.ஓ.அலுவலகம் , வன்னிப்பாக்கம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூவர், அத்திப்பட்டு, கொண்டகரை, கரையான் மேடு.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்